Watch live streaming video from radiomarte2 at livestream.com
| 6 comments ]

தலைப்பு – வந்தே மாதரம்
தலைப்பின் பொருள் – தாயே வணங்குகிறோம்
பாடலின் தாய்மொழி – தேவ நாகரி & வங்காளம்
பாடலை எழுதியவர் – பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்

பாடல் உருவான கதை

1870 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை ஆங்கிலேய பிரிட்டீஷ் ஏகாதிபத்திய குரங்குகள் ஆட்சி செய்தன. அப்பாவி இந்திய மக்களை கொன்று குவித்து அதன் மூலம் நாட்டை உரிமை கொண்டாடினர் இது உலகம் அறிந்த விஷயம். இப்படிப்பட்ட சர்வாதிகார நிலைமையில் தாங்கள் செய்வதுதான் சரி என்று தங்கள் நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு பாடலை இயற்றினர் அதுதான் இங்கிலாந்து நாட்டின் ராணியைப் பற்றிய புகழ் பாடல் அந்த பாடலுக்கான பெயர் God Save the Queen இந்த ஆங்கில பாடலை இந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய குரங்குகள் தங்கள் நாட்டு தேசபக்திப் பாடலாக அறிவித்து அனைவரும் பாடும்படி கட்டாயப் படுத்தினார்கள். இதுதான் இந்த வரலாற்று பின்னனி.

இந்த பாடலைக் கண்டு அன்றைய இந்தியர்கள் வெகுண்டெழுந்தனர் அவர்களில் ஒருவர் தான் இந்த வங்காளி பன்கிம் சந்திரர் சட்டோபாத்யாய். இவர் நமக்கும் நாடு உள்ளது நம் நாட்டிற்கும் ஒரு தாய் இருக்கிறால் என்று எண்ணி பாரதமாதாவிற்கு பாடலை இயற்றினார் அதுதான் வந்தேமாதரம் (தாயே வணங்குகிறோம்) என்ற பாடல் இது 1876லேயே எழுதப்பட்டுவிட்டது. இந்த பாடல் ஆனந்தமாதா அதாவது வங்காள மொழியில் ANONDOMOTT என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்ட மைத்துத் தந்தார். இவ்வாறுதான் இந்த வந்தேமாதரம் பாடல் உருவானது!

சுநத்திர இந்தியாவில் இந்தப் பாடலுக்கு சர்ச்சை ஏன்?
விடுதலை பெறுவதற்கு முன் இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜ்பத் ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார்.

இந்த பாடலின் மூல கருத்து துர்கை அம்மனை துதி பாடுவதே! ஆம் அதுதான் உண்மை! எனவேதான் அன்றைய காலத்திலேயே முஸ்லிம்கள் எதிர்த்து வந்தனர். வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது.

வந்தே மாதரம் பாடல் நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக இஸ்லாமியர்கள் கருதியதால் அன்றைய தேசத் தலைவர்கள் சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்க வில்லை.

இது இந்திய தேசத் தலைவர்களின் நற்குணத்தை பிரதிபலிக்கிறது. மேலும் வந்தே மாதரப் பாடல் இடம் பெற்றிருந்த பன்கிம் சந்திரரின் நூல் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் கருதினார்கள். சுந்திர இந்தியாவில் இஸ்லாமியர்கள் எழுப்பிய உரிமைக்குரள் அப்போதைய தேசத் தலைவர்களால் நியயாமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது அதன் மூலம் பாடல் சர்ச்சை நீங்கியது.


இந்தப் பாடலுக்கு மீண்டும் சர்ச்சை எவ்வாறு எழுப்பப்பட்டது?

வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக 07.09.2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலை பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது. அப்போதுதான் இசைப் புயல் என்றழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான் (இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்டது எனவே இவரை இசைப் புயல் என்று கூறுவதைவிட ஷைத்தானின் புயல் என்று கூறலாம் தவறில்லை) வந்தேமாதரம் பாடலுக்கு இசையமைத்தார். இவர் பம்பாயில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்கம் பாடல் இசையமைத்தவர் எனவே இவர் ஏகத்துவவாதியல்ல மாறாக தர்காஹ் வணங்கியே!

பணத்திற்காக மார்க்கத்தை விடுபவர்களை நாம் முஸ்லிம் என்று பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டுவதாக இருந்தால் ஏ.ஆர்.ரஹ்மானையும் பாராட்ட வேண்டும், உடல் அங்கங்களை வெளிப்படுத்தி டென்னிஸ் விளையாடும் சானியா மிர்சாவையும் பாராட்ட வேண்டும் ஆனால் இவ்வாறு பாராட்டினால் நம் ஈமான் நிலைத்திருக்குமா? என்பதுதான் உண்மையான இறை விசுவாசிகளின் கேள்வியாகும்!.


இந்தப் பாடலை பாடுவது கட்டாயமா? அரசின் பதில்!
பல இஸ்லாமிய அமைப்புக்கள் இந்த பாடலை பாடுவதற்கு தயக்கம் தெரிவித்தன எனவே மத்திய மாநில அரசாங்கம் கீழ்கண்ட வழிகளை அறிவித்தது.
· மத்திய அரசாங்கம் - இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும் சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

· மதச்சாற்பற்ற மாநில அரசாங்கங்கள் - தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தான.

· மதவாத மாநிர அரசாங்கங்கள் - பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அடுத்து, சில இஸ்லாமிய அமைப்புகள், அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

பாடல் பாடப்பட்டதன் நோக்கமும் அதன் பொருளும்

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று
ஆனந்தமத் நூலில் உள்ள வந்தேமாதரம் பாடலின் முழு வடிவம்

(வந்தேமாதரம்) தாயே வணங்குகிறோம்!
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! 'அபலா!“ என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

நபியவர்கள் இருக்கும் போதும் தன்னை வணங்கக் கூடாது என்றார்கள். தன் மறைவுக்குப் பின்னும் தன்னை வணங்கக் கூடாது என்றும் எச்சரித்துச் சென்றார்கள் அப்படியிருக்க எங்கள் நபிக்கு இல்லாத வணக்கம் இந்த பாரதமாதாவுக்கா? இது எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை அவமதிக்கும் செயல் அல்லவா?
லா இலாஹ இல்லல்லஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்)
பாரதமாதாவை வணங்கும் முட்டாள் முஸ்லிம்களே! அல்லாஹ்வைத்தவிர யாரையும் எதையும் வணங்காதீர்கள்! அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள்! தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை!
அல்ஹம்துலில்லாஹ்!
(எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

6 comments

Anonymous said... @ November 23, 2009 at 12:03 PM

Now We Realize...........

பாத்திமா ஜொஹ்ரா said... @ January 13, 2010 at 2:15 PM

http://anboduungalai.blogspot.com/2010/01/blog-post_13.html

faizal said... @ January 24, 2010 at 4:37 AM

அதிரை எச்பிராஸ் என்ற பேரில் கலந்துரையாடல் என்கிற தலைப்பில் தனிநபர் மட்டும் குடும்ப விசயங்களை பேசி அல்லது அதை ஆதரித்து இந்த இணைய தளத்தை நடத்திவரும் 5பேர் குழு இந்த கேடுகெட்ட செயலை நிறுத்தவேண்டும் இல்லை தங்களை யார் என்று சமூதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும்.திரை மறைவில் இருந்து கொண்டு மஞ்சள் பத்திரிகை போல் நடத்தும் இவர்கள் இணைய தளத்துடன் இணைப்பு வைத்துள்ள சிறந்த இணைய தளங்கள் எல்லாம் தங்களது லிங்க்களை உடனே நீக்கும் படி கேட்டு கொள்கிறேன்.இல்லை உங்கள் தளங்களின் பேரும் கெட்டுவிடும்.

PUTHIYATHENRAL said... @ January 29, 2010 at 8:07 AM

உங்களுடைய எழுத்துப்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.என் பெயர் அபூ சுமையா ,இது என் வெப் சைட், நான் அமெரிக்க கலிபோர்னியாவில் இருக்கிறேன், இதை உங்கள் தளத்தில் இணைக்கவும் http://www.sinthikkavum.blogspot.com/

PUTHIYATHENRAL said... @ January 29, 2010 at 8:07 AM

உங்களுடைய எழுத்துப்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.என் பெயர் அபூ சுமையா ,இது என் வெப் சைட், நான் அமெரிக்க கலிபோர்னியாவில் இருக்கிறேன், இதை உங்கள் தளத்தில் இணைக்கவும் http://www.sinthikkavum.blogspot.com/

இப்னு அப்துல் ரஜாக் said... @ January 31, 2010 at 3:09 PM

உள்ளம் கவர்ந்தது,அதனால் வென்றது.

http://penaamunai.blogspot.com/

Post a Comment