செய்தியும் நாமும் !
நமதூரில் இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை செல்போன் உபயோகம் மலிந்து விட்டது . இதனால் அதிக அளவு கோபுரங்களை அந்த அந்த நிறுவனங்கள் நிறுவி தடையற்ற சேவையை (?) நம் மக்களுக்கு வழங்கி வருகிறது .
இந்த கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களால் எவ்ளவு பெரிய பாதிப்புகள் உண்டாகும் என்பதை அவ்வப்பொழுது நாம் ஊடகங்களின் வாயிலாக படித்தும் பார்த்தும் வருகிறோம் .
குழந்தைகள் முதல் அனைவரையும் இதன் கதிர் வீச்சுகள் பலவித மான உடல் நலகேட்டிற்கு ஆட்படுத்துகிறது என்பதை ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்வி கோட்டா இதுபற்றிக் கூறுகையில், "அதிகமாக செல்போன் உபயோகிப்பது அல்லது செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் பெண்களுக்கு மலட்டுத் தன்மை மற்றும் நரம்புக் கோளாறுகள் அதிகம் வருவது வெளிநாடுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிப்பின் அளவு எவ்வளவு என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி மையங்களின் உதவியுடன் இதனை மேற்கொண்டுள்ளோம் என்கிறார். ஆனால் இந்த ஆய்வு முடிவு வரும்வரை கூட காத்திருக்கத் தேவையில்லை என்கிறார்கள்.
செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு சுமார் -12 முதல் -10 டிபி வரை கதிர்வீச்சு நிலவுவதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். பொதுவாக -30டிபி அளவு கதிர்வீச்சு இருக்கலாம். இந்த அளவு குறைய ஆரம்பித்தால் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஒரு செல்போன் டவருக்கு அருகில் வசித்த விஜயா பட் என்ற பெண் இப்போது மூளைக்கட்டி நோயால் அவதிப்படுகிறார்கள் என்றார் அவர் .
இனி வரும் சந்ததியினர் இந்த பாதிப்புகளுக்கு அதிகளவில் ஆளாவார்கள் என அதிர்ச்சி ஆய்வு ஒன்று கூறுகிறது.
நாம் வசிக்கும் பகுதகளில் குறிப்பாக ஆலடித்தெரு கடைத்தெரு சேது ரோடு கீழத்தெரு பெரிய ஜூம்மாப்பள்ளி அருகில் இன்னும் மக்கள் வசிக்கும் ஏராளமான் இடங்களில் செல்போன் கோபுரங்களின் ஆதிக்கத்தினால் நம்மூரில் இன்று சர்வ சாதரணமாக் கேன்சர்,மூளைக்கட்டி மார்பக புற்று நோய் உள்ளிட்ட அதி பயங்கர நோய்களால் அவதிபடுவதை நாம் காண முடிகிறது.
அடுத்தவர்கள் நோய் வாய் பட்டு மரணிக்கும் பாவத்தை நாம் ஏன் சுமக்க வேண்டும்?
என்பதை சற்று சிந்தித்து இடம் கொடுத்தவர்கள் மறுபடியும் புதுபிக்காமலும் புதிதாக இடம் கொடுப்பவர்கள் இடம் கொடுக்காமல் இருந்தால் இந்த பாதிப்புகளின் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.