'ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)..''ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்(புகாரி). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 39)..''உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 40)..'ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும், தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 23)..'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?' என்று கேட்டார். 'நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 90)
Watch live streaming video from radiomarte2 at livestream.com
0 comments
Post a Comment