Watch live streaming video from radiomarte2 at livestream.com
| 0 comments ]

(தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜா கனி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:)


விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகின்ற புர்காவை அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன. மேலும், விபச்சார வழக்கில் கைதாகும் கழிசடைப் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுக்கே உரிய கண்ணியமான புர்காவை அணிவித்து, அழைத்து வரும் கயமைத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது.


இதனால் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கேலி செய்யப்படும் வாய்ப்பும் இதனால் உருவாகியுள்ளது. விபச்சாரிகளுக்கு புர்கா அணிவிக்கும் தரங்கெட்ட செயûலைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வருக்கும், தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமுமுக மாநிலச் செயலாளர் , பி.எஸ்.ஷாகுல் ஹமீத், வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.செய்யது அபூதாஹிர் ஆகியோர் தமுமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.

THANKS : TMMK

0 comments

Post a Comment