Watch live streaming video from radiomarte2 at livestream.com
| 0 comments ]

Posted by அதிரை புதியவன் on 9/06/2013 11:30:00 AM in AP, உணவு முறை | 3 கருத்துக்கள்

பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…
இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன. 

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி. 

அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை.

ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு.

அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது.

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு.

ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம்.

பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

| 0 comments ]

அதிரை வரலாற்றில் முதல் முறையாக நமதூர் அணைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடும் நிகழ்ச்சியாக அதிரை  ஈத் மிலன் எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடந்தேறியது .

இந்நிகழ்வில் ஏராளமான மாற்று மத அன்பர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி இந்த நிகழ்ச்சியை செவி மடுத்து கேட்டனர் அப்பொழுது பேச்சாளர் இஸ்லாம் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் தாரளமாக கேட்கலாம் என கூறினார் அப்பொழுது ஒரு சிலர் இஸ்லாம் சம்பந்தமான சில கேவிகளை கேட்டனர் அதற்க்கு முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் ஃபரித் அஸ்லம் ஆகியோர் தெளிவு படுத்தினர் .

வந்திருந்தவர்கள் அனைவருக்கும் கருத்து படிவம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான் அன்பர்கள் கருத்திட்டுள்ளனர் .

| 0 comments ]


| 0 comments ]


பா.ம.க.மற்றும் வன்னியர் சங்கத்தினரின் வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட மரக்காணம் தலித் மக்களை INTJ வினர் நேரில்  சந்தித்து ஆறுதல் சொல்லி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.  

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பக்கர் தலைமையிலான குழு ஒன்று  30/04/2013 அன்று மாலை மரக்காணம் சென்றனர்.

அப்பொழுது பாமகவினர் நடத்திய  வன்முறை சம்பவங்கள் குறித்துINTJ தலைவர்  விரிவாக கேட்டறிந்தார் 

பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலம் வின் தொலைக்காட்சி நிருபர்கள் குழுவினரால் பதிவு செய்யப்பட்டது.

நாங்கள் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து இஸ்லாமிய அமைப்புகள் எங்களை சந்தித்து ஆறுதல் சொல்ல வருகின்றனர்.இந்திய தவ்ஹீத் ஜமாத்தும் வந்திருப்பது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு ஆதரவு தரும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

இனி இதுபோன்ற  வன்முறை தொடர்ந்தால் நாங்கள் இஸ்லாத்திற்கு மாறுவது குறித்து தீர்மானிப்போம் என்றார்கள் அப்பகுதி மக்கள்!

| 0 comments ]

அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்..!
SDPI உதயமாகி, தடைகள் பல கடந்து இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத சக்தியாக,
பேரொழுச்சிபெற்று திகழ்கிறது.(அல்ஹம்துலில்லாஹ்!)
மருத்துவ சேவை.. மருத்துவ உதவி.. கல்வி உதவி.. கல்வி விழிப்புணர்வு.. மரக்கன்று நடுதல்.

மேலும் சமூதாய பிரச்சனைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளுதல் என பல்வேறு சேவைகளை செவ்வனே செய்து எவ்வித பிரதிபலனும்எதிர்பாராமல் முழுமையாக கடந்த பல வருடங்கலாக அணைத்து தரப்பு மக்களுக்காக செய்து வருகின்றோம்.

இன்ஷாஅல்லாஹ்! ஊராட்ச்சி தேர்தலில் நான் 13 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு SDPI யின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் நான் வெற்றிப்பெற்றால்...

நம் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு, சாலைவசதி, வாய்கால் தூர்வாறுதல், குளம் தூர்வாறுதல், சாலையோர பூங்கா அமைப்பது, மின்கம்பங்களை முறையாக பராமரித்து மின் விளக்குகளை பொருத்தஆவண செய்வது போன்ற இதர அடிப்படை வசதிகள் அணைத்தையும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் அணைத்தையும் நடைமுறைபடுத்துவது, லஞ்சம் லாவன்ய மற்ற, ஊழல் அற்ற பேரூராட்ச்சியை உருவாக்க போராடுவது என பல்வேறு எண்ணங்களை நிறைவேற்ற.

வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் .SDPI யின் வேட்பாளராக போட்டியிடும் எனக்கு வாய்ப்பளித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் 13வது வார்டு வாக்காள பெருமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு :அதிரை எக்ஸ்பிரஸ் எந்த ஒருகட்ச்சிக்கும் வேட்பாளருக்கும் ஆதரவல்ல.
இது போன்று நமதூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களது உறுதி மொழியை அனுப்பிதந்தால் உடனே பதிவேற்ற ஆவன செய்யபடும்.

-அதிரை எக்ஸ்பிரஸ் குழு-

| 0 comments ]

தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா!

வருகின்ற செப்டம்பர் 16ம்தேதி மாலை நமதூர் பேருந்து நிலையத்தில் நகர தமுமுக வின் சார்பாக (அவசர ஊர்தி) ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா நடைபெற உள்ளது .

இதில் மமக தலைவரும் ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் ,ஹைதர் அலி .தமிமுன் அன்சாரி உள்ளிட்ட தலைசிறந்த பேச்சாளர்களும் காவல்த்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என நகரத்தலைவர் உமர்த்தம்பி அவர்கள் தெரிவித்தார் .

| 0 comments ]


| 0 comments ]