பா.ம.க.மற்றும் வன்னியர் சங்கத்தினரின் வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட மரக்காணம் தலித் மக்களை INTJ வினர் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பக்கர் தலைமையிலான குழு ஒன்று 30/04/2013 அன்று மாலை மரக்காணம் சென்றனர்.
அப்பொழுது பாமகவினர் நடத்திய வன்முறை சம்பவங்கள் குறித்துINTJ தலைவர் விரிவாக கேட்டறிந்தார்
பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலம் வின் தொலைக்காட்சி நிருபர்கள் குழுவினரால் பதிவு செய்யப்பட்டது.
நாங்கள் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து இஸ்லாமிய அமைப்புகள் எங்களை சந்தித்து ஆறுதல் சொல்ல வருகின்றனர்.இந்திய தவ்ஹீத் ஜமாத்தும் வந்திருப்பது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுக்கு ஆதரவு தரும் முஸ்லிம் சகோதரர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.
இனி இதுபோன்ற வன்முறை தொடர்ந்தால் நாங்கள் இஸ்லாத்திற்கு மாறுவது குறித்து தீர்மானிப்போம் என்றார்கள் அப்பகுதி மக்கள்!
0 comments
Post a Comment